திருநெல்வேலி சந்தைப்பகுதியின் பிரதான நுழைவாயில் பகுதியில் குப்பை தேங்கி இருப்பதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசி காணப்படுகிறது.
திருநெல்வேலி நவீன சந்தையில் மேல் மாடியில் அமைந்துள்ள மரக்கறி வியாபாரத் தொகுதியில் இருந்து வரும் கழிவுகள் மாமிச வியாபாரத் தொகுதிக்கு மலசலகூடத்திற்கு இடையில் காணப்படுகிறது இங்கு மலசலகூட கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகின்றது இது தொடர்பாக வியாபாரி க.சிவநேசன் தெரிவிக்கையில் தேங்கி நிற்கும் கழிவுகளை மாநகரசபையினார் காலை 10 மணியளவில் அகற்றுகினறனர் இதனால் மேலும் துர்நாற்றம் அதிகரித்தே காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
மேலும் வியாபாரிகளுடன் பேசிய போது இச் செயப்பாடு தொடர்ந்தும் நீடித்தால் சந்தை பகுதியில் நடமாடும் மக்கள் தொற்று நோய்க்குள்ளாகும் சந்தர்ப்பம் உண்டு என தெரியவருகிறது.
கிரிகெட் சுற்றுப் போட்டி
காரைநகர் அமரிக்கன் சிலோன்மிசன் திருச்சபையின் 166வது ஆண்டு விழாவை முன்ணிட்டு திருச்சபை வாலிபவர் நடத்தும் 10 பேர் 10 பரிமாற்றங்ககளை கொண்ட மென் பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இவவ போட்டியில் பங்குபற்ற ஆர்வமுள்ள விளையாடடு கழங்கள் ஆடி மாதம் 15ந் திகதிக்கு முன்னர் தங்களுடைய அணியினை திருச்சபை அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு திருச்சபையின் பங்குத்தந்தை வண ஆ. கமலகுமாரன் தெரிவித்துள்ளார்.
Featured Posts
Thursday, June 14, 2012
Subscribe to:
Comments (Atom)